இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் இசை வட்டத்தினால், கலை மற்றும் கலாசார பீட மொழித்துறை நான்காம் வருட மாணவன் நுவரெலியாவைச் சேர்ந்த முருகையா ராம்கியின் சிறகுகளின் சப்தம் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, பல்கலை கலாசாரபீட கலையரங்கில் அண்மையில் இடம்பெற்றது.
தமிழ் இசை வட்டத்தின் தலைவர் ரீ.டினேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கலை கலாசார பீட பீடாதிபதி எம்.எல்.பௌசுல் அமீர் கெளரவ அதிதியாகவும் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.யோகராசா, தமிழ் இசை வட்டத்தின் பெரும்பொருளாளரும் மாணவர் நலன்புரி மற்றும் உதவிச்சேவைப் பணிப்பாளருமான கலாநிதி.ஏ.றமீஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நூலின் முதற் பிரதியை ராம்கியின் பெற்றோர்களும் சிறப்பு பிரதிகளை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர். எஸ்.யோகராசா ஆகியோர் இதன்போது பெற்றுக்கொண்டனர்.
- பா.மோகனதாஸ் -